Sri Mahavishnu Info: மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று ஒப்பிலியப்ப ஸ்வாமி கையில் உள்ள வாக்கியத்தின் அர்த்தம் என்ன..? மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று ஒப்பிலியப்ப ஸ்வாமி கையில் உள்ள வாக்கியத்தின் அர்த்தம் என்ன..?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று ஒப்பிலியப்ப ஸ்வாமி கையில் உள்ள வாக்கியத்தின் அர்த்தம் என்ன..?

Sri Mahavishnu Info

ஒப்பிலியப்பன் கோயில் என்றும் உப்பிலியப்பன் கோயில் என்றும் ஒப்பில்லாத பெருமான் நம் உப்பிலியப்ப பெருமாள் என்று போற்றப்படும் திருவிண்ணகர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் பொன்னப்பன் மின்னும் பொன் விமானத்தின் கீழ் சேவை சாதிக்கின்றார், சேவித்து அருள் பெறுங்கள்.

திருவிண்ணகரப்பனை சரண் புகுவோம் பூலோக வைகுந்தமான திருவிண்ணகரை தென் திருப்பதி என்றும் அழைப்பர். மேலும் ஆகாச நகரம் என்றும் அறியப்படுகின்றது இத்திவ்ய தேசம் (விஷ்ணு க்ருஹமே அதாவது திருமாலின் இல்லமே விண்ணகர் ஆனது.) திருவிண்ணகரில் ” மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்னும் அந்த வாக்கியம் வைரங்களினால் மின்னுகின்றது ஒப்பிலியப்பனின் வலது திருக்கரத்தில்.

நாமும் இன்றும் என்றும் ஒப்பிலியப்ப பெருமாளை திருவிண்ணகரப்பனை சரணடைவோம் திருவிண்ணகரப்பன் திருவடிகளே சரணம்

என்னப்பனெனக்காயிருளாய் னென்னைப்பெற்றவளாய்
பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப்பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன்
தன்னொப்பாரில்லப்பன்தந்தனன் தனதாள்நிழலே.

அன்று வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் திருவிண்ணகரப்பனை பொன் மதில் சூழ் என்னப்பன், பொன்னப்பன்(ஹேம), மணியப்பன்(மணி), முத்தப்பன்(முத்த), தன்னொப்பாரில்லாவப்பன் (வ்யோம புரீசன்) என்று சேவித்து பாசுரம் பாடினார். இன்று அப்பொன்னப்பன் மின்னும் பொன் விமானத்தின் கீழ் சேவை சாதிக்கின்றார், சேவித்து அருள் பெறுங்கள்.

மேலும் ஆகாச நகரம் என்றும் அறியப்படுகின்றது இத்திவ்ய தேசம் (விஷ்ணு க்ருஹமே அதாவது திருமாலின் இல்லமே விண்ணகர் ஆனது. )

* ஒரு மனை நோன்பனாக (ஏக பத்னி விரதனாக), பூமிதேவித் தாயார் மட்டும் = இராமன்!
* மாம் ஏகம் சரணம் வரஜ (என் ஒருவனையே சரணம் எனப் பற்று) என்னும் கீதை சொன்ன = கண்ணனாக!

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குகோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன்தன் விண்ணகர்

வைகுண்டத்தின் திருமால் அடியாருக்கு அருள் புரியும் பொருட்டு திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாற்கடல், அழகிய மலர்களில் வண்டுகள் தேனைக் கிளரும் திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை குன்றாது சேவை சாதிக்கின்றான் என்று பாடுகின்றார் பேயாழ்வார்.

பேயாழ்வார் 2 பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், மற்றும் திருமங்கையாழ்வார் 34 பாசுரங்கள் பாடியுள்ளனர் விண்ணகர் ஒப்பிலியப்பன் மேல்.

திருவிண்ணகர், திருவேங்கடம், திருவல்லிகேணி ஆகிய தலங்களில் பெருமாள் தான முத்திரையில் சேவை சாதிக்கின்றார். அதாவது வலது திருக்கரத்தால் தனது திருவடித்தாமரைகளை காட்டுகின்றார். சரம ஸ்லோகத்தில் கூறியபடி என்னை சரணடை நான் உன்னை காப்பாற்றுவேன் என்று காட்டுகின்றார் பெருமாள். திருவிண்ணகரில் ” மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்னும் அந்த வாக்கியம் வைரங்களினால் மின்னுகின்றது ஒப்பிலியப்பனின் வலது திருக்கரத்தில்
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚