ஒரு ஞானியிடம் இரண்டு பேர்  வந்தனர்.. 

ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்..
"நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.. 
என் மனம் அதையே நினைத்துத் துடிக்கிறது.. 
நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?.."

அடுத்தவன்  ஞானியிடம் சொன்னான்.. 
"நான் இவ்வளவு பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை!...

...சின்னச் சின்னப் பொய்கள்..
...சிறு ஏமாற்றுகள்..
...இப்படி நிறைய செய்துள்ளேன்... 
தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?..."

ஞானி சிரித்தார்.

முதல் ஆளிடம்,

"நீ போய் பெரிய பாறை ஒன்றை தூக்கி வா!.." என்றார்..

இரண்டாமவனிடம், 

"நீ போய் இந்த கோணிப்பை நிறைய சிறுசிறு கற்களை பொறுக்கிக்கொண்டு வா!.." என்றார்...

இருவரும் அவ்வாறே செய்தனர்...

முதலாமவன்  பெரிய பாறையைத் தூக்கி வந்தான்.. 

இரண்டாமவன் கோணிப்பை முழுவதும் சிறுசிறு  கற்களை பொறுக்கிக்கொண்டு வந்தான்.. 

இப்போது ஞானி அவர்களைப் பார்த்துச் சொன்னார்..

"நல்லது... 
இருவரும், கொண்டு வந்தவற்றை எந்த இடத்திலிருந்து எடுத்தீர்களோ... 
அங்கேயே திரும்பவும்  வைத்துவிட்டு வாருங்கள்!.." 

முதல் ஆள் பாறையை எங்கிருந்து எடுத்தானோ அங்கேயே வைத்து விட்டு வந்தான்.... 

இரண்டாமவன் கிளம்பிய வேகத்திலேயே, குழப்பத்துடன் திரும்பி வந்து, தயக்கத்துடன்... 

"...இவ்வளவு கற்களை நான்  எப்படிச் சரியாக அவை இருந்த இடத்தில் வைக்க முடியும்?.."  என ஞானியிடம்  கேட்டான்..

ஞானி பதிலளித்தார்..

"அவன் பெரிய தவறு செய்தான்... 
அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு,  
மாற்றுப் பரிகாரம் செய்ய முற்படுகிறான்..

அவன் செய்த பெரிய பாவத்திலிருந்து ஒருவேளை, அவன் மீண்டு விடலாம்.. 

...ஆனால் நீ... 
சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும், அவை பாவம் என்று கூட உணராதவன்.. 

யாரெல்லாம் உன்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுகூட உனக்கு நினைவிருக்காது...

சிறுதுளி பெருவெள்ளம்... 

பாபங்களில் சிறிதோ பெரியதோ, 
அவற்றுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்!..

ஆனால், செய்த பாபத்திற்காக மனதார வருந்தி, மன்னிப்பு கேட்கும்போது,

...கிடைக்கவிருக்கும் தண்டனையின் வீரியத்தை, தாங்கும் சக்தியை இறைவன் உனக்கு வழங்கிவிடுவான்..

மகனே!..அதனால் யோசித்துச் செயல்படு..."