கோவிலில் அர்ச்சனை செய்வது ஏன்.?
நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது. சில பேர் அமைதியாக பிரதிப்பார்கள். சில பேர் அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை எல்லாம் கூறுவார்கள். இப்படி அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை கூறுவதால் கடவுளுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று ஆகும். பூக்களாலும், குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும்.

இந்த பதிவில் அர்ச்சனை செய்வதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

அர்ச்சனை செய்வது ஏன்.?

கோவிலில் சென்று அவர்களுடைய கஷ்டத்தை கூறுவதால் கடவுள் அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அர்ச்சனை செய்து அவர்களுடைய கஷ்டத்தை கூறி வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது

அர்ச்சனை என்பது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும்போது இது போன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும். மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கிறார்கள். சில பேர் பலன்களை கொடுத்திருந்தால் அர்ச்சனை செய்து நன்றியை செலுத்துவார்கள், சில பேர் பலன்களை கொடுப்பதற்காக அர்ச்சனை செய்து வேண்டி கொள்வார்கள்.

பெயர், ராசி வைத்து அர்ச்சனை செய்வது:

அர்ச்சனை செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள், ஒன்று அவர்கள் பெயர் மற்றும் ராசியை வைத்து அர்ச்சனை செய்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.

அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் வைத்து அர்ச்சனை செய்தால் அவரை கடவுளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். அதாவது ஒரு பெயரிலையே பல பேர் இருப்பார்கள். பெயர், ராசி,நட்சத்திரம், லக்னம் கூறி நான் தான் வந்துள்ளேன், எனக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறுவதாகும்.

சாமி பெயரில் அர்ச்சனை செய்வது:

ஒரு சிலர் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவார்கள், இதுவும் ஒரு வகையான அர்ச்சனை தான். கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது. கடவுள் இல்லா ஊர் என்று இருக்கிறதா.! உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்தால் நீங்கள் மட்டும் தான் நல்லா இருப்பீர்கள். அதுவே கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் போது அவரால் படைக்கப்பட்ட நாமும் நலமாக வாழ்வோம் அதனால் தான் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்கின்றோம்.