Sri Mahavishnu Info: குகன் – ராமாயணத்தில் ஒரு நிகரற்ற நட்பு | Guha in Ramayana குகன் – ராமாயணத்தில் ஒரு நிகரற்ற நட்பு | Guha in Ramayana
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

குகன் – ராமாயணத்தில் ஒரு நிகரற்ற நட்பு | Guha in Ramayana

Sri Mahavishnu Info

ராமாயணத்தில் குகனின் கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கம்பராமாயணத்தில் மூன்று இடங்களில் குகனைப் பற்றி வருகிறது.

சிருங்கிபேரம் என்ற இடம் காடும் நதியும் சார்ந்த இடம். இங்கிருக்கும் மக்கள் காட்டையே நம்பி இருக்கும் வேடுவ இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் தலைவன் குகன். அயோத்தியின் இளவரசரான ராமரை பற்றி கேள்விப்பட்டு அவரின் மேல் மிகுந்த அன்புடன் இருந்தான். அவரை நேரில் சந்தித்ததில்லை.

கம்பராமாயணத்தில் குகன் ராமன் மீது வைத்திருந்த பற்றை, ஆண்டாள் கண்ணனின் மேல் வைத்திருந்த காதலுடன் ஒப்பிடுகிறார் கம்பர். தசரதனின் ஆணையின்படி ராமர் தன் மனைவி சீதை மற்றும் தமயன் லட்சுமணனுடன் வனவாசம் புறப்பட்டார்.

அயோத்தியிலிருந்து இவர்களை சுமந்திரன் தேரில் கொண்டுவந்து சிருங்கிபேரம் இடத்தில் விட்டான். அந்த இடத்தின் தலைவனான குகனுக்கு ராமன் தன் இடத்திற்கு வந்த செய்தி தெரிந்தவுடன் அவரை சந்திக்க மலைத் தேனை ஆசையுடன் கொண்டு வந்தான்.

குகன் ராமனை சந்தித்ததில்லை. லட்சுமணனை ராமர் என்று எண்ணி அவருடன் உரையாட ஆரம்பித்தான். “நான் லட்சுமணன், அண்ணா குகைக்குள்” என்று லட்சுமணன் கூறவே, உள்சென்ற குகன் முதன்முதலாக ராமனை சந்தித்து தேனை கொடுத்தான்.

ராமனிடம் “நீங்கள் என்னுடன் சிருங்கிபேரத்திலேயே தங்கிவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். குகனின் அன்பை உணர்ந்த ராமர் “நால்வருடன் ஐவரானோம்” என்று சொல்லி அங்கு தங்க மறுத்தார்.

தமயனே எங்கள் மூவரையும் அயோத்தி மக்களிடமிருந்து பிரித்து வனவாசம் செய்ய உதவ வேண்டும் என்றார். அதன்படி, அயோத்தி மக்கள் யாரும் அறியாதபடி ராமர், சீதை, லட்சுமணனை அடர் காட்டுக்குள் கொண்டு சென்று சேர்த்தான் குகன்.

பரதன் தனது தமயன் ராமர் சிருங்கிபேரத்தில் இருப்பதை அறிந்து அங்கே தேடிக்கொண்டு வந்தார். அதனை அறிந்த குகன், “பரதன் ராமனுடன் போரிட்டு அவரை அழிக்க வந்திருக்கிறான்” என்று நினைத்து பரதனை எதிர்க்க கிளம்பினான்.

அப்போது பரதன் குகனிடம், “என் தமயனை நீங்கள் தான் பார்த்தீர்கள் என்றும் அவருடன் பேசினீர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். அவரை அழைத்துக் கொண்டு அயோத்தி செல்லவே நான் வந்திருக்கிறேன். அவர் எங்கே?” என்று கேட்டான்.

பரதன் ராமனின் மேல் கொண்டிருந்த அன்பை பார்த்த குகன், “நீ ஆயிரம் ராமனுக்கு சமம்” என்று கூறியதாக கம்பர் பரதனை விவரித்துள்ளார்.

ராமாயணத்தின் நிறைவாக விடைக்கொடுத்த படலம் என்ற இடத்தில் ராமரின் பட்டாபிஷேகத்திற்கு குகன் வந்தான். அங்கு ராமரிடத்தில் தன்னை “நாவாய் வேட்டுவன் நாய் அடியேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ராமன் குகனுக்கு பரிசு பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து அவனை கௌரவித்தார்.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்