Sri Mahavishnu Info: ஶ்ரீ ராமநவமி ஶ்ரீ ராமநவமி
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ஶ்ரீ ராமநவமி

Sri Mahavishnu Info
நவமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீராமபிரான். அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல் ராமாயணம். ராமன் + அயணம் என்று இதைப் பிரிப்பர். இதற்கு, ராமனின் வழி என்பது பொருள். ராமனின் வழியில் நடப்பவர்கள் நற்கதி அடைவர்.மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என் பதற்கு உதாரணமாக நடந்து கொண்டவர் அவர். பட்டாபிஷேகத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த அவரை வரவழைத்த தந்தை, "நீ பதினான்கு வருஷம் காட்டுக்குப் போ...' என்று சொன்னவுடன், காரணம் கேட்காமல், கிளம்பியவர்.ராமாயணம் தெய்வ காவியமாகவும், ஸ்ரீராமன் நம் உள்ளம் கவர்ந்தவராகவும் இருக்கிறார். எனவே தான், "ஸ்ரீராம ஜெயம்' என்று நம்பிக்கையுடன் சொன்னால் போதும், நம்மிடம் உள்ள பயம் நீங்கி, எதையும் சாதிக்கும் ஆற்றல் பிறக்கும். ராமனின் கதை வால்மீகியால் சம்ஸ்கிருதத்திலும், கம்பரால் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது. துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம், "துளசி ராமாயணம்' எனப்படுகிறது. துளசி ராமாயணத்தை ஆங்கிலத்தில் அட்கின்ஸ் என்ற பாதிரியார் எழுதியுள்ளார். ரஷ்ய மொழியிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது. ராமாயணம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கைகண்ட மருந்து. கர்ப்ப காலத்தில் ராமாயணம் படித்தால், பிறக்கும் குழந்தைகள் பக்தி, தைரியத்துடன் விளங்குவர்; நன்றாகப் படிக்கவும் செய்வர் என்பது நம்பிக்கை.

"ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா' மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்."ராம' மந்திரம் சொன்னால், பட்டமரமும் தளிர்க்கும் என்பதால் அதை, "உயிர்ப்பு மந்திரம்' என்பர். இந்த மந்திரத்தைச் சொல்லத் தெரியாமல், "மரா' என மாற்றி உச்சரித்த வால்மீகி தான், ராமாயணத்தின் ஆசிரியரானார் என்பது குறிப்பிடத்தக்கது. காசியில் இறப்பவர்களின் காதில் சிவபெருமான், "ராம' மந்திரத்தைச் சொல்லி, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையை அருளுவதாக ஐதீகம்.

ராமநவமி நன்னாளில் இருந்து தினமும், "ராம ராம' என்ற தாரக மந்திரத்தைச் சொல்லப்பழகுங்கள். "தாரகம்' என்றால் கண்மணி. இம்மந்திரத்தைச் சொல்வோரை கண்மணி போல் பாதுகாப்பான் ஸ்ரீராமன்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚