Sri Mahavishnu Info: விதி என்றால் என்ன? அதிர்ஷ்டம் என்றால் என்ன? | What is Fate and Luck in Truth? விதி என்றால் என்ன? அதிர்ஷ்டம் என்றால் என்ன? | What is Fate and Luck in Truth?
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

விதி என்றால் என்ன? அதிர்ஷ்டம் என்றால் என்ன? | What is Fate and Luck in Truth?

Sri Mahavishnu Info

ராமர் ஒரு நாள் வசிஷ்டரைக் கேட்க, அவர் பதில் கூறுகிறார்.


"ராமா! நாம் செய்த வினைகளின் பயனாக ஏற்படும் இன்ப, துன்பங்களைத்தான் விதி என்றும், அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறோம். "மனிதனின் மனத்தில் எத்தனையோ வாசனைகள் உள்ளன. அவைதான் வாக்கினால் செய்யப்படும் கர்மங்களாகவும், உடலினால் செய்யப்படும் கர்மங்களாகவும் பரிணமிக்கின்றன. அவன் வாசனைகள் எப்படியோ, அது மாதிரித்தான் அவன் செய்யும் கர்மங்களும் இருக்கும்.


எப்படி கிராமத்துக்கு போக விரும்பிகிறவன் கிராமத்துக்கும், நகரத்திற்குப் போக விரும்புகிறவன் நகரத்திற்கும் போவானோ, அது மாதிரி, "பூர்வ ஜன்மத்தில், பலன்மீது உள்ள தீவிரமான ஆசையினால், பெருத்த முயற்சியின் பேரில் செய்யப்படும் கர்மம்தான் இந்த ஜன்மத்தில் விதியாக மாறுகிறது.


"மனிதன் தன் முயற்சியினால் இந்த உலகில் எதையும் அடைய முடியும். விதியைக் கொண்டு முடியாது. "வாசனைகள் என்னும் நதி, மனிதனை, நல்ல வழியிலோ, கேட்ட வழியிலோ இழுத்துச் செல்லுகிறது. ஆனால் மனிதன் முயற்சி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். "மனிதனுடைய மனது ஓர் குழந்தையைப் போன்று சஞ்சலமுடையது. அதைக் கெட்ட வழியிலிருந்து நல்ல வழிக்குத் திருப்பலாம், அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்குத் திருப்பலாம்.


ஆகவே மனிதன் தன் முயற்சியினால்தான் அதைக் கெட்ட வழியிலிருந்து நல்ல வழிக்கு திருப்ப வேண்டும். "உலகில் மனிதன் எந்தெந்தக் காரியங்களில் ஈடுபடுகிறானோ, அதிலேயே தன்யமாகி விடுகிறான். ஆகவே, ராமா, நீ உன் முயற்சியைக் கொண்டு, இந்திரியங்களை அடக்கி, துக்கம் இல்லாத பதவியை அடை. பிறகு, அந்த நல்ல வாசனையையும் துறந்து, பிரம்மத்தோடு ஐக்கியமாகு!"


வசிஷ்டர் சொன்னதிலிருந்து, நாம் செய்யும் கர்மங்கள் விஷயமாக, நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஆகிறது. ஏனெனில், அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றன

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚