Sri Mahavishnu Info: நடக்காது என நினைத்ததும் நடக்கும் நரசிம்ம மந்திரம் | Narasimha Sloka That Transforms Fate நடக்காது என நினைத்ததும் நடக்கும் நரசிம்ம மந்திரம் | Narasimha Sloka That Transforms Fate

நடக்காது என நினைத்ததும் நடக்கும் நரசிம்ம மந்திரம் | Narasimha Sloka That Transforms Fate

Sri Mahavishnu Info
Sri Narasimha Mantra
வாழ்க்கையில் எல்லோரும் நினைப்பது நடக்க வேண்டும், எல்லாமே நல்லதாகவே நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வத்திற்கு இடமில்லாது போய்விடும்.

ஏனெனில் தெய்வம் நம்மை சோதிக்க நேரம் பார்க்கிறது. அதனால் சில நேரங்களில் எதிர்பாராதபடி எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் வாழ்வில் நடக்காது என நினைத்த காரியம் கூட நடக்கச் செய்யும் நரசிம்மரின் மந்திரம் இது:

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

இந்த மந்திரத்தை உச்சரிக்க இயலாதவர்கள் அதன் பொருளை பக்தியுடன் சொல்லலாம்:

பக்தி அற்றவர்களால் உன்னை அடைய முடியாதவனே!
தாயின் கருவறையில் பிறந்தால் தாமதமாகும் என்று தூணிலேயே அவதரித்தவனே!
நினைத்த நேரத்தில் பக்தர்களின் துன்பங்களை நீக்கும் வல்லமை கொண்டவனே!
லட்சுமி நரசிம்மா, உன் திருவடிகளைச் சரணடைகிறேன். 🙏

இந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்து வந்தால், உங்கள் வாழ்க்கையில் நடக்காது என நினைத்த காரியமும், நினைக்காததுமே நல்லதாய்தான் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் ஸ்வாமி திருவடிகளே சரணம் 🙏
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்