Sri Mahavishnu Info: மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -2 மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -2
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -2

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -2
பாண்டவர்கள் இருந்த மணல் திட்டு எல்லா பக்கங்களிலும் விரிவடைந்திருந்தது. அதற்கு வடக்கே பர்வதராஜன் என்று அழைக்கப்பட்ட மேருமலை இருந்தது. அந்த மேரு மலையிலிருந்து சொர்க்கத்திற்கு மேல் நோக்கிப் போவது அவர்கள் போட்டிருந்த திட்டம். அந்த மணல் திட்டை தாண்டியதும் துரௌபதி தரையில் வீழ்ந்து மடிந்து போனாள். இதனை கண்ட பீமன் யுதிஷ்டிரனிடம் துரோபதி வீழ்ந்து விட்டாள் அதற்கு காரணம் என்ன என்று கேட்டான். திரௌபதி அனைவரிடத்திலும் அன்பு வைத்திருந்தாள். எனினும் அவளுடைய ஆழ்ந்த அன்பு அலாதியாக அர்ஜுனன் மேல் வைத்திருந்தாள். இந்த பாரபட்சத்தை முன்னிட்டே அவள் வீழ்ந்து மடிந்தாள் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு சகாதேவன் வீழ்ந்து மடிந்து போனான். சகாதேவனின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். சாஸ்திர ஞானத்தில் தனக்கு நிகரானவர் யாருமில்லை என்ற கல்விச் செருக்கு சகாதேவனிடத்தில் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு நகுலன் வீழ்ந்து மடிந்து போனான். நகுலன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். தன் மேனி அழகை பற்றிய செருக்கு அவனிடத்தில் அதிகம் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு அர்ஜுனன் வீழ்ந்து மடிந்து போனான். அர்ஜுனன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். நிகழ்ந்த குருஷேத்திர போரில் போர் வீரர்கள் அனைவருக்கும் கடமைகள் இருந்தன. ஆனால் அர்ஜுனன் தன்னுடைய காண்டிபத்தின் மேல் இருந்த பற்றினாலும் நம்பிக்கையினாலும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு எதிரிகள் அனைவரையும் தானே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்திருந்தான். அந்த எண்ணத்தினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு பீமன் விழுந்தான். எனக்கு அழிவு காலம் வந்து விட்டது நான் என்ன குற்றம் செய்தேன் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். உன்னுடைய உடல் பலத்தை குறித்து நீ படைத்திருந்த செருக்கே உன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்று திரும்பி பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான். பீமனும் உயிர் நீத்தான். இப்பொழுது யுதிஷ்டிரன் மட்டும் தனியாக மேல் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இத்தனை நேரம் இவர்கள் பின்னே வந்து கொண்டிருந்த நாயும் யுதிஷ்டிரனை பின்தொடர்ந்து சென்றது.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்